Latestஅமெரிக்காஇந்தியாஉலகம்சினிமா

துபாய் கார் பந்தயத்தில் அஜீத்துக்கு 3-வது இடம்; குவியும் வாழ்த்துகள்

துபாய், ஜனவரி-13, துபாயில் நடைபெற்ற 24 Hours Endurance கார் பந்தயத்தில் நடிகர் அஜீத் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Ajith Kumar Racing Team ஒட்டுமொத்தமாக 23-வது இடத்தைப் பிடித்தது.

Porshe 992 பிரிவில் மூன்றாவதாக வந்ததும் அஜீத் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.

அணியினருடன் வெற்றியைக் கொண்டாடியதோடு இந்திய தேசியக் கொடியை ஏந்தி பந்தய அரங்கை வலம் வந்தார்.

பந்தயத்திற்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கிய அஜீத், மீண்டு வந்து மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், GT4 பிரிவில் அவருக்கு Spirit of The Race விருதும் வழங்கப்பட்டது.

அஜீத்தின் வெற்றியை அவரின் மனைவி ஷாலினி மகள் மற்றும் மகன் கொண்டாடிய வீடியோவும் வைரலாகியுள்ளது.

அஜீத்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மாதவனும் பந்தயத்தை நேரில் காண சென்றிருந்தார்.

அஜீத் வெற்றிப் பெற்ற தருணத்தை வீடியோவில் பதிவுச் செய்து X தளத்தில் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சித் தெரிவித்தார்.

இவ்வேளையில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், விஜய், சிவகார்த்திகேயன்
உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் X தளத்தில் அஜீத்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இளமைக் காலம் முதலே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜீத் இதுவரை குறிப்பிடத்தக்க வெற்றி எதனையும் பெற்றதில்லை.

இந்நிலையில் தனது 53-வது வயதில் இந்த துபாய் பந்தயத்தில் பெற்ற வெற்றியானது அவரின் விடாமுயற்சிக்குப் பனனாக அமைந்துள்ளது.

அதனை அவரது தீவிர இரசிகர்கள் தங்களது வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!