
துயரத்தில் முடிந்த சீனப்புத்தாண்டு கொண்டாட்டம்; செகாமாட்டில் வாணவெடி வெடித்துச் சிதறியதில் துண்டான ஆடவரின் கால்
CNY celebration turns tragic; man loses leg in Segamat fireworks blast
செகாமாட், பிப்ரவரி-19,
ஜோகூர், செகாமாட், புக்கிட் சிப்புட்டில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் ஓர் ஆடவருக்கு பெரும் துயரமாய் முடிந்துள்ளது.
தாமான் டாமாய் ஜெயாவில் நள்ளிரவு 12.30 மணியளவில், 30 வயது அந்நபர் வீட்டின் முன்பாக 16-shot வாணவெடியை கொளுத்திய போது அது வெடித்துச் சிதறியதில், அவரின் இடது கால் முழங்காலுக்கு கீழே துண்டானது.
உடனடியாக அவர் செகாமாட் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அவ்வாடவர் தனது காலை நிரந்தரமாக இழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், சிகிச்சைக்குப் பிறகு அவரது நிலைமை சீராக இருப்பதாகக் கூறினர்.
குடும்பத்தாரின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை சிதறடித்த இச்சம்பவம், 1957-ஆம் ஆண்டு வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை மற்றும் RM10,000 அபராதம் எதிர்கொள்ள நேரிடும்.
திறந்தவெளிகளில் மட்டுமே பட்டாசு மற்றும் வாணவெடிகளை வெடிக்கவும், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவும் போலீஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.



