
குவாலா சிலாங்கூர், ஜனவரி-19-புக்கிட் பாடோங்கில் தூடோங் அணிந்த ஒரு பெண் குட்டைப் பாவாடையில் ஏரோபிக் உடற்பயிற்சி செய்த வீடியோ குறித்து, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை விசாரித்து வருகிறது.
வெள்ளை மேலங்கியுடன் சிலர் கால்சட்டை அணிந்தும், ஒரு பெண் குட்டைம் பாவாடையுடனும் ஏரோபிக் செய்யும் வீடியோ முன்னதாக டிக் டோக்கில் வைரலாகி முஸ்லீம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இது இஸ்லாத்தின் மாண்பை களங்கப்படுத்துவதாக பலர் கூறினர்.
இந்நிலையில், அந்தச் செயலை “மிகவும் ஒழுங்கற்றது” எனக் குறிப்பிட்ட JAIS இயக்குநர் டத்தோ Mohd Shahzihan Ahmad, அது நிகழ்ந்த இடம், ஏற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்தினார்.
சம்பவம் மாநில ஷாரியா சட்டங்களை மீறியதாக நிரூபிக்கப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.



