சியோல், செப்டம்பர் -1, தென் கொரியாவில் வயது முதிர்ந்த தம்பதி பயணித்த கார், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
கார் பள்ளத்தில் விழுந்த வேகத்தில் 76 வயது மூதாட்டிக்கு Cardiac Arrest எனப்படும் இதய முடக்கம் ஏற்பட்டது.
CPR சுவாச உதவிகள் வழங்கப்பட்டதில், தெய்வாதீனமாக அவர் பிழைத்தார்.
82 வயது கணவருக்கு காயமேதும் ஏற்பட்டதா என உடனடி தகவல்கள் இல்லை.
என்றாலும், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளை நிற Tivoli கார் சாலையின் நடுவே பக்கவாட்டாக முழுவதுமாக பள்ளத்தில் விழுந்துக் கிடக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
நிலம் உள்வாங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய உடனடி விசாரணை தொடங்கியுள்ளது.
மலேசியாவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இது போன்ற நில அமிழ்வு ஏற்பட்டு இந்திய நாட்டு பெண் காணாமல் இன்றோடு 10 நாட்கள் ஆகின்றன.
அவரைத் தேடி மீட்கும் பணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் நேற்றோடு முடித்துக் கொள்ளப்பட்டது.