
தெமர்லோ, நவம்பர்-20 – பஹாங், தெமர்லோவில் ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரை வீடியோ எடுத்து சிக்கிய அரசு ஊழியர் கைதாகியுள்ளார்.
நவம்பர் 9-ஆம் தேதி Pekan Sehari Temerloh சந்தையில் 41 வயது அந்த குமாஸ்தா பிடிபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
தன்னை சந்தேக நபர் வீடியோ எடுப்பதை ஒரு கட்டத்தில் 33 வயது அப்பெண் உணர்ந்து சத்தம் போட, சந்தையிலிருந்த பொது மக்கள் கையும் களவுமாக அவ்வாடவரைப் பிடித்தனர்.
தகவல் கிடைத்து உடனடியாக சம்பவ இடம் விரைந்த போலீஸ் அந்நபரைக் கைதுச் செய்து கைப்பேசியையும் பறிமுதல் செய்தது.
கைப்பேசியை பரிசோதனை செய்ததில் உள்ளே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட அவரின் படங்கள் இருந்தன.
தவிர மற்ற ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் சிக்கின.
இந்நிலையில் 24 மணி நேரங்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட பிறகு சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார்.
விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் அனுப்பப்படும் என தெமர்லோ போலீஸ் கூறிற்று.



