
தெமர்லோ, ஆகஸ்ட்-5 – 44 குற்றப்பதிவுகளுடன் வெளியில் சுற்றித் திரிந்த போதைப்பித்தன் ஒருவன் பஹாங், தெமர்லோவில் போலீஸாருடன் கைகலந்த போது கைதுச் செய்யப்பட்டான்.
நேற்று காலை 10.30 மணிக்கு 4 சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த 35 வயது அந்நபர், போலீஸ் வாகனத்தைக் கண்டதும் ஓட்டம் பிடித்தான்.
போலீஸும் துரத்திச் சென்ற நிலையில், Jalan Tengku Ismail சமிக்ஞை விளக்குப் பகுதியில் அவனது வாகனம் சாலைத் தடுப்பை மோதி கவிழ்ந்தது.
சம்பவ இடம் விரைந்த போலீஸார் அவனைக் கைதுச் செய்ய முயன்ற போது அவன் முரண்டு பிடித்தான்.
இதனால் இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர் ஒருவழியாக அவனைக் கைதுச் செய்த போலீஸார், அவன் yabu மற்றும் syabu வகை போதைப்பொருள் வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
வாகனத்தைச் சோதனையிட்டதில், கொள்ளையிட பயன்படுத்தப்படும் சுத்தியல், இரும்பு போன்ற ஆயுதங்களும், தொடர்பு கேபிள்களும் கண்டெடுக்கப்பட்டன.
அவன் ஓட்டி வந்த 4 சக்கர வாகனமே கிளந்தான், கோத்தா பாருவில் திருடப்பட்டது தான் என்பதும் தெரிய வந்தது.
அதோடு, பேராக் மஞ்சோங் போலீஸாலும் அவன் தீவிரமாகத் தேடப்பட்டு வந்துள்ளான்.
கடந்த பிப்ரவரி முதல் கோலாலம்பூர், சிலாங்கூர், பஹாங் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தொடர்பு கேபிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் விசாரணையில் அவன் ஒப்புக் கொண்டதாக தெமர்லோ போலீஸ் கூறியது.