
வெமுலவாடா, நவம்பர்-26 – தென்னிந்திய மாநிலம் தெலங்கானாவில் ஏழை மக்களுக்காக அரசாங்கம் கட்டிய வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்துகொண்டிருக்கும் போதே, அதன் தரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அதிகாரியா ஒரு பெண் உள்ளிட்ட அதிகாரிகள் நிலைத்தடுமாறி விழும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
எனினும் அவர்களுக்கு காயமேதும் ஏற்படவில்லை.
முந்தைய BRS அரசாங்கத்தால் கட்டப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், அது குறைந்த தரத்தில் கட்டப்பட்டதாலேயே தரை சரிந்ததாகவும் ஆளுங்கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சட்டினார்.
இந்த சம்பவம், மொத்தம் 56.1 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அந்த 144 வீடுகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது.



