தைப்பிங், அக்டோபர்-4 – தைப்பிங், சிம்பாங், சுங்கை லாரூட் அருகே புதிதாக பிறந்த குழந்தையை வீசியதன் பேரில் 34 வயது நேப்பாள ஆடவன் கைதாகியுள்ளான்.
புதன்கிழமை அதிகாலை 3.32 மணிக்கு தைப்பிங் மருத்துவமனை கொடுத்த புகாரைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீஸ், 24 மணி நேரங்களில் அவ்வாடவனைக் கைதுச் செய்தது.
வீட்டில் பிரசவம் நடந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக வந்த கம்போடிய நாட்டுப் பெண் மீது மருத்துவமனைப் பணியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
குழந்தை எங்கே என கேட்டால் இறந்து விட்டதாக அவர் கூறினார்; ஆனால் இறந்த குழந்தை அவரிடத்தில் இல்லை.
இதையடுத்தே அந்த அதிகாலையிலேயே மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் செய்தது.
கம்போடியப் பெண்ணை விசாரித்ததில், துப்புத் துலங்கி போலீஸ் நேப்பாள ஆடவனைப் பிடித்துச் சென்றது.
குற்றவியல் சட்டத்தின் 318-வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.