ஈப்போ, அக்டோபர்-25 – பேராக், தைப்பிங் அருகே PLUS நெடுஞ்சாலையின் 230.3-வது கிலோ மீட்டரில் நேற்று மதியம் சுற்றுலா பேருந்து, டிரேய்லர் லாரியை மோதியதில் ஜப்பானிய சுற்றுப்பயணிகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
ஓட்டுநரும் சுற்றுலா வழிகாட்டி யுமான இரு உள்நாட்டினரும் அவர்களில் அடங்குவர்.
எஞ்சிய 11 ஜப்பானிய சுற்றுப்பயணிகளில் 8 பேர் பெண்களாவர்.
முன்பகுதி சேதமடைந்த பேருந்திலிருந்தவர்களை, தீயணைப்பு-மீட்புத் துறை பாதுகாப்பாக வெளியே மீட்டது.
காயமடைந்த அனைவரும் தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.