
தைப்பிங், மே-2, பேராக், தைப்பிங், சிம்பாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கடை ஊழியர் கொல்லப்பட்டது தொடர்பில், 40 வயது சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
நேற்று காலை 11 மணிக்கு 19 வயது நபரைக் கொல்லப் பயன்படுத்திய பாராங் கத்தியுடன், அவ்வாடவர் கைதானார்.
கொல்லப்பட்டவர் முன்னதாக இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டு பொது மக்களில் ஒருவர் அழைத்துத் தகவல் கொடுத்ததாக, தைப்பிங் போலீஸ் தலைவர் நாசீர் இஸ்மாயில் கூறினார்.
பொறாமையே அக்கொலைக்குக் காரணமென்பது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஏற்கனவே 4 குற்றப் பதிவுகளைக் கொண்ட சந்தேக நபர், கைதான போது morphine போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிச் செய்யப்பட்டது