
பெய்ஜிங், மார்ச்-9 – சீனாவின் உள் மங்கோலியா (Inner Mongolia) பகுதியில் 1 மில்லியன் டன் எடையிலான தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளைக் குறிப்பாக அமெரிக்காவை வாய் பிளக்க வைத்துள்ளது.
இதன் மூலம் 60,000 ஆண்டுகளுக்கு சீனாவுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க முடியுமென்பதே அதற்குக் காரணம்.
அணு மின் உற்பத்தியில் யுரேனியம், புளுட்டோனியம் தாதுக்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தோரியம் முக்கியத்துவம் பெறுகிறது.
என்றாலும் யுரேனியத்தைக் காட்டிலும் தோரியத்திலிருந்து 200 மடங்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தோரியத்தினால் ஆன அணு மின் உற்பத்தி சுற்றுச் சூழலை பெரிய அளவில் பாதிக்காது; அதோடு மின் உற்பத்தி செலவும் குறையும்.
அணு மின் சக்தி உற்பத்தியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், 1 மில்லியன் தோரியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சீனாவுக்குக் கிடைத்த பெரும் புதையலாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் இது உள்ளபடியே அமெரிக்காவுக்கு பெரும் ‘வயிற்றெரிச்சலைக்’ கிளப்பியுள்ளது.
அதுவும் டோனல்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகியிருப்பதால், இவ்விஷயத்தில் எப்படி எதிர்வினையாற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கிடைத்தற்கரிய புதையல் கிடைத்திருப்பதால் சீனாவில் இனி ஏராளமான தோரியம் அணுமின் நிலையங்கள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.