Latestமலேசியா

தைப்பூசத்தை முன்னிட்டு 7 முக்கிய சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், ஜன 29 – எதிர்வரும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 30 ஆம்தேதி முதல் பிப்ரவரி 3ஆம்தேதிவரை முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளன.

தைப்பூசத்தில் லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் புக்கிட் அமான் மற்றும் சிலாங்கூர்
போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 1,520 போலீஸ்காரர்கள் பணியில் நிறுத்தப்படுவார்கள் .

166 உயர் போலீஸ் அதிகாரிகளுடன் , 1,354 கீழ்நிலை போலீஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுவார்கள்.

இவர்களில் சிலாங்கூர் போலீஸ் படையின் 1,376 போலீஸ்காரர்களும் அடங்குவர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ சசெலி கஹார் ( Shazeli kahar ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பத்துமலை தைப்பூச திருநாளை முன்னிட்டு கீழ்க்கண்ட
7 பிரதான சாலைகள் நிலைமைக்கு ஏற்ப
கட்டம் கட்டமாக மூடப்படும்.

1.Kampung Melayu Batu Caves சமிக்ஞை விளக்குப் பகுதி
2.MRR 2 சாலையிலிருந்து பத்துமலை திருத்தலம் செல்லும் சாலை
3.பத்துமலைக்கு செல்லும் Jalan Perusahaan சாலை
4.ஸ்ரீ கோம்பாக் MRR2 சாலையிலிருந்து பத்துமலை தொழில்
மயப் பகுதிக்கான நுழைவு சாலை
5.Seri Batu Caves சாலை முச்சந்தியிலிருந்து பத்துமலைக்கான பழைய சாலை
6.Shell நிலையத்திற்கு முன்புறம் உள்ள சமிக்ஞை விளக்கு சாலை

மற்றும்

7.பத்துமலை கோயிலின் வாசலை நோக்கி செல்லும் சாலை

தைப்பூச விழாவில் சம்பந்தப்படாத சாலை பயனர்கள் மாற்று சாலையை பயன்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டனர். பத்துமலை வளாகத்தில் டுரோன் பறக்கும் நடவடிக்கைக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கார் நிறுத்திவைக்கப்படும் இடங்களில் மட்டுமே தங்கள் வாகனத்தை நிறுத்திவைக்கும்படியும் வாகன உரிமையாளர்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!