
பத்து மலை, ஜனவரி-31-நாளை தைப்பூசம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று காலை பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு சிறப்பு வருகை மேற்கொண்டார்.
அவரை, கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஜன சந்திரன் முனியனும் உடன் வந்திருந்தார்.
இருவருக்கும் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
அந்தோணி லோக் பத்து மலை KTM கம்யூட்டர் இரயில் நிலையத்திற்கும் வருகைத் தந்து, பக்தர்கள் மற்றும் பயணிகளுடன் நேரடியாக உரையாடினார்.
அமைச்சரின் இவ்வருகை, சமய அமைப்புகளும் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டு, நாட்டின் பல்லின – மத ஒற்றுமை மற்றும் நலனைக் காக்கும் முயற்சியை பிரதிபலிக்கிறது.



