
பினாங்கு, ஜனவரி 30 – இவ்வாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, பினாங்கு இந்து அறக்கட்டளை நேற்று பாலத்தண்டாயுதபாணி கோயிலில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் டத்தோ’ ஸ்ரீ ஜனா அவர்களை வரவேற்றது.
இந்த நிகழ்வில், YB RSN Rayer, YB செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணசலம், டத்தோ’ தினகரன், மற்றும் பினாங்கு இந்து அறக்கட்டளை செயலாளர் பூ. விஷாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு அவரை அன்புடன் வரவேற்றனர்.
இந்த வருகை, தைப்பூசம் போன்ற முக்கிய மத விழா பாதுகாப்பாகவும், சீராகவும், ஒழுங்காகவும் நடைபெற அரசாங்கத்திற்கும் இந்து சமூகத்திற்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.

இவ்வேளையில், தைப்பூசம் காலத்தில் பக்தர்களின் வசதிக்காக இலவச பேருந்து மற்றும் பேரி (ferry) சேவைகள் வழங்க ஏற்பாடு செய்த போக்குவரத்து அமைச்சர் YB Anthony Loke அவர்களுக்கு பினாங்கு இந்து அறக்கட்டளை தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தது. இந்த சேவைகள் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கி, விழா கால கூட்டநிர்வாகத்தை திறம்பட மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மலேசிய சிவில் சேவையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவராக டத்தோ’ ஸ்ரீ ஜனா திகழ்ந்து வருகிறார். அவரது சிறப்பான சாதனைகள் இந்திய சமூகத்துக்கு பெருமை சேர்ப்பதோடு, பொதுச் சேவையில் நேர்மை, திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் விளங்குகின்றன.



