கோலாலம்பூர், ஜன 22 – பேங்க் நெகாரா மலேசியா தனது QPR
ஆண்டு வட்டி விகிதத்தை தொடர்ந்து 3 விழுக்காடாக நிலைநிறுத்தியுள்ளது. தற்போதைய QPR நிலையில் பண கொள்கை நிலைப்பாடு பொருளாதாரத்திற்கு ஆதரவாகவும் , பணவீக்கம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளின் தற்போதைய மதிப்பீட்டிற்கு நிலையாக இருப்பதாகவும் மத்திய பொருளகம் தெரிவித்துள்ளது.
கடன் வட்டி விகிதத்தை தொடர்ந்து 3 விழுக்காடாக நிலைநிறுத்துவது என பேங்க் நெகாராவின் நாணய கொள்கை குழுவின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 கூட்டங்களில் OPR 3.0 விழுக்காடாக மத்திய வங்கி பராமரித்து வருகிறது. விலை நிலைத்தன்மைக்கு மத்தியில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பணக் கொள்கை நிலைப்பாடு உகந்ததாக இருப்பதை பேங்க் நெகாரா உறுதி செய்யும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சாதகமான தொழிலாளர் சந்தை நிலைமைகள், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் குறைவான கட்டுப்பாடான பணக் கொள்கை ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் வலுவாக இருக்கும் என்று பேங்க் நெகாரா எதிர்பார்க்கிறது