
குவாலா திரங்கானு, பிப்ரவரி-20 – குவாலா திரங்கானுவில் பணி ஓய்வுப் பெற்ற 61 வயது மூதாட்டி, தொலைபேசி மோசடியில் சிக்கி 110,000 ரிங்கிட்டை இழுந்துள்ளார்.
ஜனவரி 10-ஆம் தேதி ஒரு காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணிடமிருந்து அம்மூதாட்டிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
மூதாட்டியின் பெயரை பொறுப்பற்ற நபர் ஒருவர் 63,000 ரிங்கிட் மருத்துவ காப்பீட்டு கோரிக்கைக்காக தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேக நபர் தெரிவித்தார்.
தொடர்ந்து, போலீஸ் எனக் கூறப்பட்ட தரப்புடன் தொடர்பு மாற்றப் பட்ட போது, புதிய வங்கிக் கணக்கைத் திறக்குமாறு மூதாட்டி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
பிறகு தனது Tabung Haji கணக்கிலிருந்து 45,000 ரிங்கிட்டை, புதிதாகத் திறந்த வங்கிக் கணக்குக்கு அவர் மாற்றினார்.
அந்த வங்கிக் கணக்கு விவரங்களையும் காப்புறுதி முகவர் எனக் கூறித் தன்னைத் தொடர்புக் கொண்டவர்களிடம் கொடுத்து விட்டார்.
பிறகு வங்கியில் 50,000 ரிங்கிட் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து, அந்த தொகையையும் முழுமையாக புதிய வங்கிக் கணக்கில் போட்டார்.
இது தவிர, மேலும் 13,000 ரிங்கிட்டை 2 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
மொத்தமாக 110,000 ரிங்கிட் பணத்தையும் மாற்றிய பிறகே தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து, அவர் போலீஸில் புகார் செய்தார்.