Latestமலேசியா

தொழிலாளர்களுக்காக புதிய பயிற்சி தளத்தை உருவாக்கும் KESUMA

கோலாலம்பூர், அக்டோபர-23,

 

மனிதவள அமைச்சான KESUMA, மலேசியத் தொழிலாளர்களுக்காக தொழில் துறை அங்கீகாரம் பெற்ற புதிய பயிற்சி தளத்தை உருவாக்கி வருகிறது.

 

இத்தளம் உள்ளூர் மற்றும் உலகளாவிய சிறந்த பாடநெறிகளை வழங்கி, தொடர்ச்சியான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என, அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

 

இந்த மாதிரி இந்தோனேசியா, மியன்மார், தீமோர் லெஸ்தே போன்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மலேசியா, தொழிலாளர் திறன் மேம்பாட்டில் வட்டார முன்னோடியாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

AYOS எனப்படும் ஆசியான் திறன் ஆண்டு 2025: உலகத் திறன் ஆய்வரங்கில் தொடக்க உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.

 

இவ்வேளையில் 2023 முதல் 2025 ஆகஸ்ட் வரை, HRD Corp எனும் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தால் வசூலிக்கப்பட்ட RM 6.17 பில்லியன் வரிக் கட்டணத்தில் 94% அல்லது RM 5.77 பில்லியன் நிதி 4 மில்லியன் தொழிலாளர்களை பயிற்றுவிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

அதோடு ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய பயிற்சி வாரமும் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது — முதலாண்டில் 1.3 லட்சம் பங்கேற்பாளர்களில் இருந்து 2025 ஆம் ஆண்டில் 4 மில்லியன் பங்கேற்பாளர்களாக, 73,000 இலவச பாடநெறிகளுடன் அது உயர்ந்துள்ளது என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!