Latestமலேசியா

தொழில்துறை வாய்ப்புகளை கண்டறிந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பியுங்கள்! துறை சார் நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி – CUMIG iNSIGHT Series

கோலாம்பூர் ஜூலை-31- எஸ்.பி.எம் முடித்த மாணவர்கள், எஸ்.டி.பி.எம், மெட்ரிகுலேஷன் மற்றும் டிப்ளோமா கல்வி தகுதி உள்ள மாணவர்கள் பொது பல்கலைக்கழக விண்ணப்பங்கள் முறையாக செய்வது தொடர்பில் CUMIG iNSIGHT Series எனும் இயங்கலை வழிக்காட்டல் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 28-ஆம் ஜுலை தொடங்கிய இந்நிகழ்ச்சி 8-ஆம் ஆகஸ்ட் வரை தினமும் இரவு 8 முதல் 10 மணி வரை நடக்கிறது.

   

இப்போது நடைப்பெறும் UPU Fasa Kemaskini மற்றும் Fasa Rayuan காலத்தினை முன்னிட்டு, மாணவர்களுக்கு தாங்கள் விரும்பும் துறைகளின் கல்வித் திட்டங்களும் தொழில்துறை வாய்ப்புகளும் பற்றிய விரிவான புரிதலை வழங்கும் முக்கியமான நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி CUMIG எனும் மலாயா பல்கலைக்கழக இந்திய பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் போது விரும்பும் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், அதன் தேவைகள் மற்றும் தகுதிகள் போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே சரியான தேர்வை செய்ய முடியும்.

அவ்வகையில் இத்தொடர் வழிகாட்டல் நிகழ்ச்சி பலருக்கும் ஒரு தெளிவான தொழில்துறை பாதையை உருவாக்கும் வழிகாட்டியாக அமையும்.

இதில் துறை சார் வல்லுனர்கள் கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பல்வேறு பயனுள்ள கருத்து பரிமாற்றங்களை செய்யவுள்ளதால் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!