
கோலாலம்பூர், செப்டம்பர் -23,
மலேசிய மக்களுக்கு சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வாரி வழங்கிய பிரபல நகைச்சுவை நடிகரான சத்யாவின் இடது கால் வெட்டப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில், மருத்துவமனைக் கட்டிலில் சத்யா அமர்ந்திருப்பதையும், இடது கால் முழங்கால் வரை வெட்டப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
பல காலங்களாக அவர் தனது கலைப்பணியின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு சிரிப்பைப் பரிமாறியவர் என்றும் இவ்வாறான கடினமான தருணத்தில் அவருக்கு மதிப்பும், அங்கீகாரமும், ஆதரவும் கிடைக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கருத்துரைத்து வருகின்றனர்.
மேலும், சத்யா அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவருக்கு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.