கிள்ளான், செப்டம்பர் -5 – சிலாங்கூர், கிள்ளான், Bandar Botanik-கில் வாடிக்கையாளர் போல் நகைக்கடைக்குள் நுழைந்த ஆடவர், தங்கச் சங்கிலியுடன் ஓட்டம் பிடித்தார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தாயாருக்கு பரிசளிப்பதற்காக தங்கச் சங்கிலியை வாங்க வந்திருப்பதாகக் கூறியவர், 24,800 ரிங்கிட் மதிப்பிலான சங்கிலியை தேர்வுச் செய்தார்.
அதை கையில் பார்த்துக் கொண்டிருந்தவர் கைப்பேசியில் யாருடனோ பேசுவது போல் வெளியில் சென்று, அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டு, 28 வயது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.