Latestஇந்தியாஉலகம்சினிமாமலேசியா

நடிகை ஹன்சிகா மொத்வானி விவாகரத்து; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை, மார்ச்-12-அரண்மனை, ஆம்பள உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த பிரபல நடிகை ஹன்சிகா மொத்வானி – தொழிலதிபர் சோஹைல் கதுரியா (Sohail Khaturiya) தம்பதியர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

2022-ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணம், சுமார் 4 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்துள்ளது.

மும்பையில் உள்ள பந்த்ரா குடும்ப நல நீதிமன்றம், இருவரின் பரஸ்பர மனுவை ஏற்று விவாகரத்துக்கு அனுமதி வழங்கியது.

திருமணத்திற்குப் பிறகு சில காலமாகவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவாகரத்து வழக்கில் ஹன்சிகா ஜீவனாம்சம் எதையும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!