
பத்தாங் காலி, ஜனவரி-12 – UPSI எனப்படும் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழக
மாணவர் ஒருவர், சிலாங்கூர், பத்தாங் காலி கெடோண்டோங் (Kedondong) நீர்வீழ்ச்சியில் நண்பரைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று மதியம் வாக்கில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
20 வயதுகளில் உள்ள அம்மாணவர், நண்பரை மீட்க முயன்றபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
பின்னர், அவரது உடல் சுமார் 10 மீட்டர் தூரத்தில் மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பத்தாங் காலி–கெந்திங் மலை சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த கெடோண்டோங் நீர்வீழ்ச்சி, சுற்றுப் பயணிகளின் விருப்ப இடமாக இருந்தாலும், வழுக்கலான பாறைகள் மற்றும் திடீர் நீரோட்டம் நிறைந்ததாகும்.



