
தாப்பா, ஏப்ரல்-21, ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லீம்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும்;
அவர்களை விட முஸ்லீம் அல்லாதவர்கள் வலுவோடு இருப்பதை கடவுளே அனுமதிப்பதில்லை என பேசியுள்ளார், பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்.
முஸ்லீம்களுக்கு அரசியல் வெற்றி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாம் தான் அதிகாரத்தில் அமர வேண்டும், ஆட்சி நடத்த வேண்டும்; மற்றவர்களை வழிநடத்த வேண்டும்.
என்றாலும், முஸ்லீம் அல்லாதோரையும் நாம் காக்க வேண்டும்.
அவர்களின் உரிமைகளை நாம் மதிக்கிறோம்; ஆனால் அதிகாரம் என வரும் போது ஓர் எல்லை இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி அவாங், பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அவ்வாறு சொன்னார்.
ஆயர் கூனிங்கில் ‘இஸ்லாம்’ வெற்றிப் பெறுவது முக்கியம் என்பதால், ஹஜ் யாத்திரையை தள்ளிப் போடுமாறும் அவர் ஆலோசனைக் கூறினார்.
இடைத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 3 நாள் கழித்து ஹஜ் பயணம் தொடங்குகிறது.