கோலாலம்பூர், செப்டம்பர்-23, நாட்டின் போவ்லிங் விளையாட்டுத் துறையின் முன்னோடியும், போவ்லிங் சகாப்தமுமான டத்தோ Dr பி.எஸ்.நாதன், வயது மூப்பால் நேற்று காலமானார்.
90 வயது டத்தோ நாதன், மனைவி மற்றும் 2 பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார்.
மலேசிய டென்பின் போவ்லிங் சங்கத்தை (MTBC) நிறுவி 50 ஆண்டுகளாக அதன் தலைவராக பதவி வகித்தவர் Dr பி.எஸ்.நாதன்.
அன்னாரின் மறைவு மலேசிய போவ்லிங் துறைக்கே பேரிழப்பு என, MTBC அறிக்கையொன்றில் கூறியது.
டத்தோ பி.எஸ்.நாதனின் தலைமையில், வழிகாட்டுதலில் மலேசிய போவ்லிங் விளையாட்டுத் துறை உலகத் தரத்திற்கு முன்னேற்றம் கண்டதை யாரும் மறுக்க முடியாது.
உள்ளூர் மற்றும் அனைத்துலக விளையாட்டு அரங்கிற்கு அவராற்றிய பங்கு காலத்திற்கும் நினைவுக் கூறப்படும் என MTBC தனது இரங்கல் செய்தியில் கூறியது.