Latestமலேசியா

நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் மலாய் மொழி & வரலாறு பாடம் கட்டாயம் – பிரதமர்

புத்ராஜெயா, ஜனவரி 20 -மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதவாது மதப்பள்ளிகள், அனைத்துலக பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட, தேசிய பாடத்திட்டத்தின் படி மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்கள் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த விதிமுறை பள்ளி நேரத்திலேயே அமல்படுத்தப்படும் என்றும் UEC வழங்கும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று தொடங்கப்பட்ட தேசிய கல்வித் திட்டத்தின் கீழ், 2027 முதல் படிவம் 3 மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் மதிப்பீடு நடத்தப்படும்.

அதே ஆண்டில் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் திட்டங்கள் உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

மேலும், 2027 முதல் TVET அதாவது தொழில்நுட்ப–தொழில்வழி கல்வி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஆசிரியர் அறைகள் மேம்பாட்டிற்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 ஆரம்பப்பள்ளிகள் மற்றும் 5 இடைநிலைப் பள்ளிகள் “ஊக்கப் பள்ளிகளாக” தேர்வு செய்யப்படுவதோடு, STPM, matriculation, foundation, மற்றும் diploma தேர்வுமுறைகளில் 4.0 CGPA புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் உறுதியான சேர்க்கை வழங்கப்படவும் உள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச கல்வி, STPMல் சிறந்த மாணவர்களுக்கு பல்கலைகழங்களில் 3,000 கூடுதல் இடங்கள், அதேசமயத்தில் கூடுதலாக 10,000 மாணவர்களுக்கு scholarship குறிப்பாக அதில் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5,800 scholarshipகள் ஒதுக்கப்படும் என அன்வார் கூறினார்.

அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பொது ஆய்வு பாடம் மலாய் மொழியில் கற்பிக்கப்படும் என்றும் இதில் அரசியலமைப்பு மற்றும் வரலாறு முக்கியமாக இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!