
செப்பாங், டிசம்பர்-31 – KLIA Terminal 1 முனையத்தில் அனைத்துலகப் பயணிகளுக்கான அனைத்து சுங்கப் பரிசோதனைகளும் நாளை ஜனவரி 1 முதல் புறப்பாடு வாயில்களில் ஒருங்கிணைக்கப்படும்.
போக்குவரத்து அமைச்சு அதனை அறிவித்துள்ளது.
இதுநாள் வரை பயணிகள் குடிநுழைவுப் பரிசோதனைகளுக்குப் பிறகே சுங்க பரிசோதனைகளுக்குப் உட்பட வேண்டியிருந்தது.
இதன் காரணமாக உச்ச நேரங்களில் நெரிசல் ஏற்பட்டு பயணிகள் காத்திருக்கும் நேரமும் அதிகமாகி அசௌகரியத்தைக் கொடுத்தது.
இந்த ஒருங்கிணைப்பின் மூலம், பயணிகள் விரைந்து சோதனைச் செய்யப்படுவதால், புறப்பாடு மண்டபத்தில் உள்ள கூட்டமும் காத்திருக்கும் நேரமும் குறையும் எனக் கூறப்படுகிறது.
சோதனைகள் ஒருங்கிணைக்கப்படுவதால், பாதுகாப்பு அம்சங்களுக்கு இது எந்தவிதக் குறைச்சலையும் ஏற்படுத்தாது என அமைச்சு உத்தரவாதம் அளித்தது.
எது எப்படி இருப்பினும், புறப்படுவதற்கு முன் அறிவிக்க வேண்டிய பொருட்களை முறையாக அறிவித்து
சுங்க விதிகளை கடைபிடிக்குமாறு பயணிகள் மீண்டும் நினைவுறுத்தப்படுகின்றனர்.



