
கோலாலம்பூர், அக்டோபர் -17,
2025ஆம் ஆண்டுக்கான STR நிதியுதவியின் நான்காவது கட்ட (Fasa 4) உதவித்தொகை அக்டோபர் 18 அதாவது நாளை முதல் வழங்கப்படவுள்ளது.
இது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆரம்பத்திலிருந்த அட்டவணையைவிட முன்னதாகவே வழங்கப்படுகிறது.
அரசு 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ள இந்த உதவித்தொகையை மொத்தம் 8.8 மில்லியன் மக்கள் பெற்றுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெறுநர்களின் பிரிவினையைப் பொறுத்து அதிகபட்சம் 700 ரிங்கிட் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் மேலும், 200,000 புதிய விண்ணப்பதாரர்களும் இம்முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.
மடானி அரசு, நாட்டின் வளங்கள் அனைத்து மக்களுக்கும் சமமாகச் சென்றடைய உறுதியாக செயல்படுகிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேலும் STR 2025, தீபாவளியை முன்னிட்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் அதே நேரத்தில், (SARA) 2026 திட்டங்களுக்கான பதிவு, ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் என்பதனையும் அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சு பொதுமக்களை பொய்யான இணைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகள் குறித்து எச்சரித்து, அமைச்சு ஒருபோதும் SMS அல்லது WhatsApp வழியாக தனிப்பட்ட தகவல்களை கேட்காது, என தெரிவித்துள்ளது.