
நிபோங் தெபால், செப்டம்பர்- 23,
பினாங்கு பூலாவ் பூரூங் குப்பை மேட்டில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இந்த முறை தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்னும் போராடி வருகின்றனர் என்று பினாங்கு மாநில தீ மற்றும் மீட்பு துறை செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
தீயால் பாதிக்கப்பட்ட பகுதி சுமார் 100 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலம் பரப்பளவில் உடையதென்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த சம்பவத்தில் எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் அறியப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் கடும் வெப்பத்தின் காரணமாக இதே குப்பை மேட்டில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடப்பட்டது.