
நியூயார்க், ஜூலை 17 – நேற்று, நியூயார்க் சோதீப்யஸ் நகரில் நடைபெற்ற ஏலத்தில், செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்த பாறை கல் 4.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
24.5 கிலோ கிராம் எடையிலான அந்தக் விண்கல், இவளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டது, இதுவரை வரலாற்றில் காணாத ஒன்று என்று ஆய்வாளர்களை கருத்துரைத்துள்ளனர்.
இந்நிலையில் அக்கல்லை வாங்கியவரின் அடையாளங்கள் ரகசியமாக உள்ளன என்றும், மேலும் அந்த விண்கல் பொது அல்லது தனியார் சேகரிப்பில் சேருமா என்பதும் இன்னும் தெரியப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏலம் சோதிப்யஸ் நகரின் வருடாந்திர கீக் வீக் நிகழ்வின் ஒரு பகுதியாகும் என்றும் இதில் 26 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடு மற்றும் 1.4 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட மண்டை ஓடு ஆகியவை உள்ளடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.