
ஜார்ஜ் டவுன், ஜூலை 31 – கடந்த வாரம் ஒரே பாலின ‘டேட்டிங்’ செயலியில் சந்தித்த ஒருவரின் நிர்வாண புகைப்படங்களைக் காட்டி, அவரை மிரட்டி பணம் பறித்த நாசி லெமாக் விற்பனையாளர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 8,400 ரிங்கிட்டை மிரட்டி பறித்த அந்த 35 வயதான ஆடவன் நீதிபதியின் முன் தனது குற்றத்தை முற்றிலும் மறுத்துள்ளான்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும், சவுக்கடியும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என்றாலும் சந்தேக நபரின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் உத்தரவாதத்துடன் 3,500 ஜாமீன் தொகையை விதித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினரைக் குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.