‘நிலைமை கைமீறி’ விட்டதாம்; ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக அக்மால் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜனவரி-4,
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என்றும், பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலே வலியுறுத்தியுள்ளார்.
மடானி அரசாங்கத்தில் அம்னோவின் பங்கு மற்றும் நிலை குறித்து கட்சி தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளதாக, நேற்று நடைபெற்ற இளைஞர் பிரிவின் சிறப்பு மாநாட்டில் அவர் கூறினார்.
நடப்பு அரசாங்கத்தின் கீழ், அம்னோ ஆதரவாளர்கள் மற்றும் அடிமட்ட உறுப்பினர்களின் பிரச்னைகள் தற்போது உரிய முறையில் கவனிக்கப்படவில்லை என்றும், எனவே மலாய் சமூகத்தின் ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்காக, அம்னோ பழையபடி பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதே சரியான வழி என்றார் அவர்.
நிலைமைக் கைமீறும் போது, அதிகாரத்தில் தொடருவதற்காக கட்சியின் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்யக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
கொள்கைகளை அடமானம் வைப்பதற்கு பதிலாக பேசாமல் எதிர்கட்சியாக இருந்து விட்டு போய் விடலாம் என்றார் அவர்.
அக்மாலின் இந்த கருத்துகள், அம்னோவின் எதிர்கால அரசியல் நகர்வு குறிப்பாக 16-ஆவது பொதுத் தேர்தல் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அம்னோ தலைமைத்துவமும் அதன் உச்சமன்றமுமே இறுதி முடிவெடுக்க வேண்டுமென்பதால், இளைஞர் பிரிவின் குரல் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை.
கொஞ்ச காலமாகவே ஒற்றுமை அரசாங்கத்தில் குறிப்பாக DAP-க்கு எதிராக குரல் எழுப்பி வரும் அக்மால், அண்மையில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் மனு நிராகரிக்கபட்டதை DAP தலைவர்கள் சிலர் வெளிப்படையாக கொண்டாடியதை அடுத்து பொங்கி எழுந்தார்…



