
கோலாலம்பூர், நவம்பர்-11,
நேற்று காலை சிறிய அளவில் நிலம் உள்வாங்கியதால் சேதமடைந்த சாலையின் ஒரு பகுதி சரிசெய்யப்பட்டதை அடுத்து, ஜாலான் மஸ்ஜித் இந்தியா மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL அதனை உறுதிப்படுத்தியது.
Jalan Bunusஸில் பழுதுபார்க்கும் பணிகள் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
“என்றாலும் DBKL தொடர்ந்து அணுக்கமான கண்காணிப்பை மேற்கொள்ளும், அத்துடன் இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் ஆய்வுகள் மற்றும் ஸ்கேன் செய்யும்” என்று அறிக்கை வாயிலாக DBKL கூறியது.
மக்களின் பாதுகாப்பே தங்களின் முன்னுரிமை என்றும் அது கூறிற்று.
பாம்பே Jewellery நகைக்கடை முன்னால் உள்ள சாலையின் ஒரு பகுதியே, காலை 8.40 மணியளவில் உள்வாங்கியது.
ஆனால் யாரும் அதில் காயமடையவில்லை.
இதன் வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.
கடந்தாண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி, இந்திய சுற்றுப் பயணி ஜி. விஜயலட்சுமி என்பவர், இதே ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து காணாமல் போனார்.
அதன் பிறகு அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நிலம் உள்வாங்கியுள்ளது.



