
பேங்காக், நவ- 10,
நில வெடியில் இருவர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் மலேசியா ஏற்பாட்டில் கம்போடியாவுடன் செய்துகொண் பலவீனமான அமைதி உடன்பாடு முடக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரக்குல் ( Anutin Charnvirakul ) மிரட்டியிருக்கிறார். திங்கட்கிழமை Si Sa ket மாநிலத்தில் வழக்கமான பரிசோதனையின்போது புதிதாக பதிக்கப்பட்ட நிலவெடி வெடித்ததில் தாய்லாந்தின் இரு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். ஜூலை மாதத்தில் ஏற்பட்ட தொடர் வெடிப்புகள், பல ஆண்டுகளில் மிக மோசமான எல்லை மோதல்களைத் தூண்டியதைத் தொடர்ந்து, நான்கு மாதங்களில் ஏழாவது முறையாக இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதன் விளைவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவுடன் கையெழுத்திட்ட கோலாலம்பூர் அமைதி உடன்பாட்டின் விதிமுறைகளை தாய்லாந்து நிறுத்தி வைக்கும். இது உறவுகளை இயல்பாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளை கோடிக்காட்டுகிறது என்று அனுடின் கூறினார்.
தாய்லாந்து தடுத்துவைத்துள்ள 18 கம்போடிய வீரர்களை விடுவிப்பதையும் நிறுத்தும். மேலும் நாங்கள் இதுவரை செய்து வந்த அனைத்தும் இன்னும் தெளிவு பெறும் வரை நவம்பர் 21 ஆம் தேதிவரை நிறுத்தப்படும் என்று அனுதின் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். நாங்கள் நினைத்தபடி பகைமைபோக்கு குறையவில்லை என்பதை நிலவெடி சம்பவம் காட்டுகிறது. எனவே இங்கிருந்து மேலும் முன்னேற முடியாது என தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார்.



