அபு தாபி, செப்டம்பர் -30, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முன்னணி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் போலீவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், பிரசித்திப் பெற்ற IIFAA விருதளிப்பு விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்று அசத்தியுள்ளார்.
அதுவொரு மகிழ்ச்சிகரமான மறுபிரவேசம் என அவர் வருணித்தார்.
அபுதாபியில் சுமார் 5 மணி நேரங்களுக்கு நடைபெற்ற அவ்விருதளிப்பு விழாவை இணைந்து தொகுத்து வழங்கியவர், கடந்தாண்டு மாபெரும் வசூல் வேட்டை நடத்திய ஜவான் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
விருதுகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்; பேராசையும் கூட; எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு விருதை கையால் பிடிப்பது தனி சுகமே என்றார் அவர்.
கடந்தாண்டு ஜவான் மற்றும் பதான் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுக்கும் முன்னர், ஐந்தாண்டுகளுக்கு ஷாருக் எந்தவொரு படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.
மாறாக 2022-ல் சில படங்களில் கௌரவத் தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார்.