
சிப்பித்தாங், ஆகஸ்ட்-11 – சபா, சிப்பித்தாங்கில் மறுவிசாரணைக்காக தோண்டி எடுக்கப்பட்ட முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் (Zara Qairina Mahathir) உடல் இன்று அதிகாலை 1 மணிக்கு மேல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
Tanjung Ubi இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் மழைக்கும் மத்தியில், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் சுமார் அரை மணி நேரத்தில் சாராவின் சடலம் புதைக்கப்பட்டது.
கோத்தா கினாபாலு Queen Elizabeth மருத்துவமனையில் ஞாயிறு காலை 11 மணிக்குத் தொடங்கிய சவப்பரிசோதனை 8 மணி நேரங்கள் வரை நீடித்து இரவு 7.30 மணிக்கு நிறைவுப் பெற்றது.
பள்ளித் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் சாரா, ஜூலை 16-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கால்வாயில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மறுநாள் Queen Elizabeth மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
எனினும், தங்கும் விடுதியிதில் பகடிவதைக்கு ஆளாகியிருக்கலாம் என, சாராவின் மரணத்திற்குப் பிறகு சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் போலீஸ் விசாரணை அறிக்கையைப் பரிசீலித்த சட்டத் துறை அலுவலகம், மறுவிசாரணைக்காக சாராவின் சடலத்தைத் தோண்டியெடுக்க உத்தரவிட்டது.