Latestமலேசியா

நீதிமன்ற அவமதிப்பு; பாபாகோமோவுக்கு 30 நாள் சிறை

கோலாலம்பூர், ஆக 27 – நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக இணைய எழுத்தாளர் Papagomo என்ற Wan Muhamad Azri Wan Deris சிற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 30 நாள் சிறைத் தண்டனை விதித்தது.

போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ரஷாருடின் உசேய்ன் ( Razarudin Husain ) செய்திருந்த அவதூறு வழக்கு மனுவை நீதித்துறை ஆணையர் Gan Techiong அனுமதித்ததைத் தொடர்ந்து இந்த தண்டனையை விதித்தார்.

மேலும் ரஷாருடினுக்கு செலவுத் தொகையாக 30,000 ரிங்கிட் வழங்கும்படி வான் முகமட் அஸ்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் மேல்முறையீட்டுக்கான முடிவுவரை தண்டனையை நிறுத்திவைப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

கடந்த மே மாதம் 1ஆம்தேதி சமூக ஊடகங்களில் வான் முகமட் கேட்டுக்கொண்ட மன்னிப்பு ஏற்க முடியாது. அவரது வருத்தத்தை அந்த மன்னிப்பு உணர்த்தவில்லை.

அவர் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க விரும்பினால், யூடியூப், டிக்டோக் அல்லது எக்ஸ் செயலியில் அதனை சரியான முறையில் எவ்வாறு தெரிவிப்பது என்பது அவருக்குத் தெரியும்.

பி ரம்லியின் Maafkan Kami என்ற பாடலின் இசையைக் கொண்ட வீடியோவில் அல்ல. அந்த வீடியோ மன்னிப்பு கேட்பதாக இல்லாமல் ஒரு பொழுதுபோக்காக உள்ளது.

எனவே அது மன்னிப்பு அல்ல எனநீதித்துறை ஆணையர் சுட்டிக்காட்டினார். ரஷாருடினிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக நீதிமன்றம் அவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது, அதே போல் வருத்தத்தைக் காட்டும் புதிய வீடியோவைப் பதிவேற்றியதற்காக கூடுதலாக 15 நாட்கள் சிறைத்தண்டனையும் விதித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!