
(Sumbangan Asas Rahmah (Sara)உதவித்தொகை நேற்று முதல் தகுதியுள்ள பயனாளிகளின் மைகாட் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
(STR) எனப்படும் Sumbangan Tunai Rahmah பிரிவின் கீழ் பெறுபவர்களுக்கான தொகை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 ரிங்கிட்டாகவும், மூத்த குடிமக்கள் மற்றும் தனி நபர்களுக்கு 50 ரிங்கிட் என கணக்கில் சேர்க்கப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
STR மற்றும் eKasih பிரிவுகளின் கீழ் தகுதிபெற்ற குடும்பத்திற்கு உதவித் தொகை 200 ரிங்கிட்டும் ,மூத்த குடிமக்களுக்கு 150 ரிங்கிட்டும் தனி நபர்களுக்கு 100 ரிங்கிட்டும் வரவு வைக்கப்பட்டது.
சாரா 2026 உதவித் பொருட்களை பெறுநர்கள், தங்களின் MyKad ஐப் பயன்படுத்தி திறக்கப்பட்ட கணக்கின் மூலம் அடிப்படைத் தேவைகளுக்கான பணமில்லா உதவியை இயல்பாகவே பெறுவார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மளிகைப் பொருட்களை, MyKad ஐப் பயன்படுத்தி நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள் அல்லது சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.
சாரா என்பது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் அதிகம் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கான இலக்கு உதவித் திட்டமாகும்.
இது 2026 பட்ஜெட்டின் கீழ் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



