
நைஜீரியா, டிசம்பர் 30 – நேற்று நைஜீரியாவில் முன்னாள் உலக Heavy Weight குத்துச்சண்டை சாம்பியன், Anthony Joshua நைஜீரியாவில் நடந்த கடுமையான சாலை விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சீரான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவரது இரண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் உயிரிழந்தனர்.
ஜோஷுவா பயணித்த லெக்சஸ் கார் வேகமாக சென்றது மட்டுமல்லாமல், முன் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியுடன் மோதியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பிறகு ஜோஷுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.



