
கோலாலம்பூர், மார்ச் 12 – Plus மலேசியா பெர்ஹாட் இயக்கும் நெடுஞ்சாலைகளில் அடுத்த வாரம் நடைபெறும் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து, உச்ச நாட்களில் மொத்த போக்குவரத்து
2.3 மில்லியன் வாகனங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் நெடுஞ்சாலைகளை தினசரி பயன்படுத்தும் வாகனங்களின் சராசரியை ஒப்பிடும்போது இது 21 விழுக்காடு அதிகமாகும் என பிளஸ் நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் அய்ரினா நிக் ஜபார் ( Nik Airina Nik Jaffar ) தெரிவித்தார்.
நோன்பு பெருநாளுக்கு முன் மார்ச் 18,19 மற்றும் 20 ஆம் தேதியும் கொண்டாட்டத்திற்கு பிறகு மார்ச் 27,28 மற்றும் 29 ஆம் தேதிகளின் பயண நாட்களில் வாகனங்களின் எண்ணிக்கை உச்சக் கட்டமாக இருக்கும் என அவர் கூறினார்.
இன்று Persada Plus சில் 2026 ஹரிராயா கொண்டாட்டம் தொடர்பான போக்குவரத்து அதிகரிப்பை நிர்வகிப்பதற்கான பிளஸ் தயாரிப்பு விளக்கம் மற்றும் ஊடகக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் போலீஸ் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ
Muhammad Hasbullah Ali, PLUS தலைமை இயக்க அதிகாரி, டத்தோ ஷக்கரியா அகமட் ஜபிடி ( Zakaria Ahmad Zabidi) மற்றும் PLUS தலைமை வணிக அதிகாரி, முகமட் பௌசி புனிரன், ( Mohd Fauzi Puniran ) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் PLUS பயன்பாட்டின் மூலம் MyPLUS-TTA டிஜிட்டல் பயணத்திட்டத்தின் அடிப்படையில் தங்கள் சொந்த ஊர்களுக்காக கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு திரும்பும் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளும்படி Nik Airina பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.



