Latestமலேசியா

பகடிவதை எதிர்ப்பு திட்டத்திற்கு 2026 பட்ஜெட்டில் ஒதுக்கீடு – கல்வி அமைச்சு

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 29 – வரும் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், கல்வி அமைச்சு, அனைத்து கல்வி கூடங்களிலும் பகடிவதை எதிர்ப்பு கட்டமைப்பை (Anti-Bullying Framework) அமல்படுத்துவதை முக்கிய கவனமாகக் கொள்ளும் என அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலர் பள்ளி வசதிகளை மேம்படுத்துதல், சிறப்பு கல்வித் தேவைகள் கொண்ட மாணவர்களின் திறன்களை உயர்த்துதல், டிஜிட்டல் கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை வலுப்படுத்தும் திட்டங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.

வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதியன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மக்களவையில் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் பெருகி வருகின்றன என்றும் அதிலும் மிகுந்த கவனத்தை ஈர்த்தது சபாவின் துயரச் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் படிவம் ஒன்று மாணவி ஜாரா கைரினா மகாதிரின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

பகடிவதை பிரச்சனையைக் கலைவதற்கு, கல்வி அமைச்சின் இந்த புதிய முயற்சி நிச்சயம் மாபெரும் மாற்றத்தை கொண்டு வருமென்று எதிர்பார்க்கப்படுகின்றது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!