Latestமலேசியா

பகாங் ஆற்றில் ஆண் மாணவர் சடலம் மீட்பு

ஜெரண்டுட் , ஜன 6 – Kampung Jerantut Feri அருகே Sungai Pahang ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டாம் படிவ மாணவரின் சடலம் கண்டுப் பிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் இன்று காலை மணி 7.37 அளவில் அந்த மாணவனின் உடல் மிதந்து கொண்டிருந்தபோது கண்டுப்பிடிக்கப்பட்டது. அஸ்ரி ஜைனுல் பாமி என்ற அடையாளம் கூறப்பட்ட 14 வயது மாணவனை தேடும் நடவடிக்கை இன்று காலையில் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டபோது அவனது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக பகாங் தீயணைப்பு மற்றும் குடிநுழைவுத்துறையின் பொது உறவு அதிகாரி சுல்பைடி ஸக்கரியா தெரிவித்தார். Temir தேசிய இடைநிலைப் பள்ளியில் பயின்று வந்த அஸ்மி ஜைனுல், தனது இரண்டு நண்பர்களுடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சனிக்கிழமை மாலை மணி 5 அளவில் ஆற்றில் தவறி விழுந்தான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!