Latestமலேசியா

பக்கத்து வீட்டுக்காரரால் சிறுவன் கழுத்தறுக்கப்பட்டானா? வைரல் செய்தியை மறுத்த குவாந்தான் போலீஸ்

குவாந்தான், அக்டோபர்-4 – பஹாங், குவாந்தானில் பக்கத்து வீட்டுக்காரரால் 12 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்டதாக வைரலான செய்தியை, போலீஸ் மறுத்துள்ளது.

மாறாக, உறவினரான 25 வயது அவ்விளைஞரின் செயலால், அச்சிறுவனது கழுத்தில் காயம் மட்டுமே ஏற்பட்டதாக, குவாந்தான் போலீஸ் தலைவர் வான் மொஹமட் சஹாரி வான் பூசூ (Wan Mohd Zahari Wan Busu) தெரிவித்தார்.

காயம் ஏற்படும் அளவுக்கு ஒரு சண்டை நிகழ்ந்ததாக புதன்கிழமை இரவு போலீசுக்குத் தகவல் கிடைத்தது.

25 வயது இளைஞன் முள்ளுக்கரண்டியால் அச்சிறுவனின் கழுத்தில் குத்தியதால், அவன் பக்கத்துக்கு வீட்டுக்கு ஓடியுள்ளான்.

இதனால் அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கும் கரண்டியால் குத்தியவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

பின்னர் இருவருமே மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, வெளி நோயாளியாக சிகிச்சையளிக்கப்பட்டது.

காயம் மோசமில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவனான அவ்விளைஞன் சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

அவனுக்கு பழையக் குற்றப் பதிவுகள் எதுவுமில்லை; சம்பவத்தின் போது போதைப்பொருளும் உட்கொண்டிருக்கவில்லை.

எனவே விஷயம் தெரியாமல் புரளியைக் கிளப்பி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாமென, பொது மக்களை வான் சஹாரி கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!