
பங்கோர், ஜனவரி-19-பேராக், பங்கோர் தீவுக்கு அருகே 72 வயது தைவானிய மூதாட்டி ஒருவர் snorkelling நீர்மூழ்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூழ்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் Pulau Giam பகுதியில் நேற்று மதியம் 12.30 மணியளவில் நிகழ்ந்தது.
குடும்பத்தினருடன் snorkelling செய்தவர், சுற்றுலா வழிகாட்டியால் நீரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சடலம், உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு இச்சம்பவத்தை திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.



