Latestமலேசியா

பங்சாரில் வெளிநாட்டு நபர் கொலை; நண்பர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 23வ – பங்சாரில் வீடு வாசல் இன்றி வாழ்ந்து வந்த வெளிநாட்டு நபர் ஒருவர் இன்று காலை தலையில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் அவரது நண்பர் ஒருவர், பங்சாரில் உள்ள மேனாரா UOA அருகே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பிரிக்‌ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் (Hoo Chang Hook) கூறினார்.

 

கைது செய்யப்பட்ட நபர், உயிரிழந்தவரை ஒரு மாதமாக அறிந்தவர் என்றும் அவர்கள் இருவரும் ஜாலான் பங்சாரிலுள்ள மேம்பாலத்தின் கீழ் சேர்ந்து தங்கி வந்துள்ளனர்.

 

நேற்றிரவு இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. அந்த நேரத்தில் சந்தேக நபர், கோபத்தில் தனது நண்பரை தள்ளியதில் அவர் கிழே விழுந்தார் என்றும் அறியப்படுகின்றது.

 

சந்தேக நபர் தற்போது பிரிக்‌ஃபீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். நாளை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் தடுப்பு காவலில் வைப்பதற்கு மனு தாக்கல் செய்யப்படும்.

 

இந்த வழக்கு மலேசிய குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!