
பட்டர்வெர்த், ஆகஸ்ட் 15 – மனைவியை இழந்த 67 வயதான ஓய்வுபெற்ற பள்ளி அலுவர் ஒருவர், இரண்டாண்டுகளாக தனது சொந்த பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.
9 வயதான அச்சிறுமியை, கெப்பாலா பாத்தாஸ் பெர்மாத்தாங் கெராய் பெசாரிலுள்ள வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் அந்த வயோதிகன்..
தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சவுக்கடியும் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு உடல் மற்றும் மனரீதியான துன்பத்தை ஏற்படுத்திய சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்க கூடாதென்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் நீதிமன்றம் உத்தரவாதத்துடன் கூடிய 12,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்துள்ளது.
இந்த வழக்கு, மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக வரும் செப்டம்பர் 24 ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.