
பட்டர்வெர்த், ஆகஸ்ட் 7 – இன்று அதிகாலையில், பட்டர்வெர்த் பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், ரகசிய அறையில் ஒளிந்து கொண்டிருந்த 35 விலைமாதர்கள் (GRO) வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 19 வியட்நாமியர்கள், 14 தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரும் லாவோஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவர் என்று குடியேற்ற அமலாக்கப் பிரிவு இயக்குநர் பாஸ்ரி ஒஸ்மான் கூறியுள்ளார்.
இந்த வளாகத்தில் 10 அறைகள் இருப்பதாகவும், ஒவ்வொரு அறையிலும் ஒரு சோபாவின் பின்னால் ஸ்பீக்கர் மற்றும் கழிப்பறையுடன் கூடிய ரகசிய அறைகள் மறைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட GROக்கள் ஒரு மணி நேரத்திற்கு 250 முதல் 300 ரிங்கிட் வரைஊதியம் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாவி குடிநுழைவு தடுப்புக் கிடங்கிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மேல் விசாரணைக்காக செபராங் ஜெயா குடிநுழைவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.