பட்டர்வெர்த், டிச 6 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் Sungai Dua டோல் சாவடி சாலை தடுப்பில் புரோடுவா மைவி கார் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் கல்லூரி மாணவன் ஒருவன் மரணம் அடைந்ததோடு இதர இருர் காயம் அடைந்தனர். இன்று காலை மணி 9.40 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் உடலில் கடுமையாக காயம் அடைந்த 18 வயதுடைய முகமட் அடாம் ( Muhammad Adam )
என்ற மாணவன் இறந்தான்.
அவனது இரு நண்பர்களான 18 வயதுடைய முகமட் அமிருல் (Mohammad Amirul மற்றும் 22 வயதுடைய Muhammad Sahmi Mohd Yusof காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அந்த காரின் பின்னால் அமர்ந்திருந்த முகமட் அடாம் சிக்கிக் கொண்டதால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக கப்பளா பத்தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி இட்ருஸ் ஜக்கரியா தெரிவித்தார்.