
கோலாலம்பூர், ஜூலை 31 – நேற்று டாங் வாங்கி மற்றும் கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து இந்தியப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனையின் போது, கட்டாயத்தின் அடிப்படையில் வலுக்கட்டாயமாக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 39 வயது பெண் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
மலேசியாவில் தனக்கு பணிப்பெண் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து பின்பு தன்னை விபச்சாரத்தில் ஈடுபட செய்வதற்கு அடித்து உதைத்து வற்புறுத்தினர் என்று அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் உசுப் ஜான் முகமட் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு, ஒரு பாலியல் சேவைக்கு 50 ரிங்கிட் முதல் 80 ரிங்கிட் வரை ஊதியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வழக்கு தண்டனைச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று முகமட் உசுப் கூறியுள்ளார்.