கோலாலம்பூர், நவம்பர் 13 – கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பணியிடங்களில் விபத்து, மரணச் சம்பவங்கள் குறைந்துள்ளன என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு புள்ளி விவரங்கள் படி, மலேசியா முழுவதும் மொத்தம் 38,950 பணியிட விபத்துகளும், 324 மரணங்களும் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
2023ஆம் ஆண்டு 1000 பணியாளர்களில், 2.46 விழுக்காடு பணியாளர்கள் பணியிடங்களில் நிகழும் விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார விருது நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் கூறினார்.
Pc
2023-யில் பதிவு செய்யப்பட்ட பணியிட விபத்துகளின் விகிதம் இலக்கை விட அதிகமாக இருந்தாலும், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒப்பிடுகையில் அவ்வெண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பணியிடங்களில் நிகழும் விபத்துகள் 24% விழுக்காடு குறைந்துள்ள நிலையில் விபத்துகளால் ஏற்படும் மரணச் சம்பவங்களும் 56% விழுக்காடு குறைந்துள்ளது.
இந்நிலையில், பணியிடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பலப்படுத்தத் தனது அமைச்சு உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர் ஸ்டீவன் தெரிவித்தார்.