Latestமலேசியா

பண்டார் உத்தாமா மாணவியைக் குத்தி கொன்ற வழக்கு; குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் மனநிலை பரிசோதனை நீட்டிப்பு

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 21 – கடந்த அக்டோபர் மாதம், பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா பள்ளியில் 16 வயது மாணவியை குத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது மாணவனின் மனநிலை பரிசோதனை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனை அறிக்கை டிசம்பர் 19 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மருத்துவமனை, மாணவனின் பள்ளிப் பதிவுகளைப் பெற்று, அதன் அடிப்படையிலும் அவனின் மனநிலையை மதிப்பீடு செய்யவுள்ளது.

அம்மாணவன் அப்பள்ளியில் பயிலும் படிவம் 4 மாணவியைக் கொடூரமாக குத்தி கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மேலும் 12 பிரம்படிகள் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!